Latestமலேசியா

போதைப் பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு; அறுவர் கைது

நிபோங் தெபால், செப் 8 – போதைப் பொருள் கடத்தலில் சம்பந்தப்பட்ட கும்பலைச் சேர்ந்த அறுவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து போதைப் பொருள் மற்றும் 77,000 ரிங்கிட் மதிப்புடைய வேன் மற்றும் போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தென் செபெராங் பிறையின் OCPD Supritenden Lee chong chern தெரிவித்தார். தாமான் Indah Halaman-னிலுள்ள ஒரு வீட்டில் பரிசோதனை நடத்திய போலீசார் உள்ளூர் ஆடவரையும் பெண்மணியையும் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட் விசாரணைக்குப் பின் மூன்று ஆடவர்கள் மற்றும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டதாக Lee Chong chern தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!