
கோலாலம்பூர், ஜன 4 – 4 ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டிற்குள் 585.1 கிராம் போதைப் பொருளைக் கடத்தி கொண்டு வந்ததற்காக மூவருக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம், சாகும் வரை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதிராக நியாயமான சந்தேகத்தினை எழுப்பத் தவறியதை அடுத்து, பீட்டர் யேசுதாஸ், காசிநாதன், நாகராஜ் ஆகிய மூவருக்கு அந்த தண்டனையை விதிப்பதாக நீதிபதி Abdul Halim Aman தெரிவித்தார். தங்களது கட்டுப்பாட்டில் இருந்த மாட்டுத் தொழுவத்தில் போதைப் பொருள் இருந்த விஷயத்தை அம்மூவரும் அறிந்தி வைத்திருந்ததாக அவர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டார். முன்னதாக அந்த மூவருடன் சேர்த்து ராதாகிருஷ்ணன், பாலகுகன் இருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில், ராதாகிருஷ்ணன் தடுப்புக் காவலில் இறந்து விட்டதோடு, பாலகுகன் தலைமறைவாகியுள்ளான்.