
கோலாலம்பூர், ஜன 4 – திரவமய Marijuana போதைப் பொருளில் சம்பந்தப்பட்ட கும்பலை முறியடித்த போலீசார் அக்கும்பலைச் சேர்ந்த 11 பேரை கைது செய்தனர். ஜாலான் கிள்ளான் லாமாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் சோதனையில் நால்வர் கைது செய்யப்பட்டனர். அந்த சோதனையின்போது 493 கிரேம் கஞ்சா மற்றும் 3,496 மில்லிலிட்டர் திரவமய போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் பின் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் மேலும் ஏழு சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக பிரிக்பீல்ட் OCPD Abdul Shukor தெரிவித்தார்.