ஈப்போ, பிப் 16 – போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் மற்றும் விநியோக மையத்தை முறியடித்த போலீசார் அறுவரை கைது செய்தனர். பேரா மற்றும் நெகிரி செம்பிலானில் மேற்கொள்ளப்பட்ட 5 சோதனை நடவடிக்கையில் 21 மற்றும் 39 வயதுக்குட்பட்ட அந்த சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக பேரா போலீஸ் தலைவர் டத்தோ Mior Faridalathrash wahid தெரிவித்தார்.
ஈப்போ மேருவில் இரட்டை மாடி வீடு ஒன்றில் 9.4 கிலோ ஹரோய்ன் முறியடிக்கப்பட்டது அவற்றின் மொத்த மதிப்பு 167, 268 ரிங்கிட் என அவர் தெரிவித்தார். போதைப் பொருள் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ரசாயனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று ஈப்போவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
மேலும் 5 வாகனங்கள், 181,500 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் உட்பட போதைப் பொருட்கள் என 348,000 ரிங்கிட் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மியேர் பரிடலத்ரஸ் வாஹிட் கூறினார்.