போதைப் பொருள் விநியோகிப்பாளர் போலீஸ் லாக்காப்பில் தூக்கில் தொங்கினார்

ஜோர்ஜ் டவுன் , ஜூலை 7- சுமார் 116,000 ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட போதைப் பொருள் விநியோகிப்பாளர் ஒருவர் நிபோங் தெபாலில் வட செபெராங் பிறை மாவட்ட போலீஸ் நிலையத்தின் லாக்காப்பில் தூங்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். லூனாசில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்ட 40 வயதுடைய அந்த ஆடவர் போலீஸ் லாக்கப்பின் இருப்பு கதவில் தடுப்புக் கைதிகளுக்கான சட்டையின் மூலம் தூக்கில் தொங்கினார். அந்த லோக்காப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் நேற்று காலை 10 மணியளவில் அந்த ஆடவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதை பார்த்ததாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ Khaw Kok Chin தெரிவித்தார்.
வியாபாரியான அந்த நபர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாக அவர் கூறினார். அந்த ஆடவரை மூன்று நாட்களுக்க தடுத்து வைக்கும் நீதிமன்றத்தின் உத்தரவை பெற்றபின் போலீஸ் லாக்காப்பில் கொண்டுவந்த பின் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த அறையில் அப்போது மூன்று சந்தேகப் பேர்வழிகள் இருந்தததாகவும் அப்போது அவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததாகவும் கூறப்பட்டது. போலீஸ் லாக்காப்பின் சிசிடிவி ரகசிய கண்காணிப்பு கேமாராவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அந்த ஆடவர் சொந்தமாக தூக்கில் தொங்கியது தெரியவந்ததாக Khaw kok Chin தெரிவித்தார்.