ஜோர்ஜ் டவுன், பிப் 19 – போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பதாக சிறுநீர் பரிசோதனையின்போது கண்டறியப்பட்ட பேரா சட்டமன்ற உறுப்பினர் மீதான விசாரணை அறிக்கை மாநில சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் பிறையில் உள்ள பொழுதுபோக்கு விடுத்தியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது பேராவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் Terrence Naidu கைது செய்யப்பட்டார்.
சிறுநீர் பரிசோதனையின் மருத்துவ அறிக்கை உட்பட அந்த சட்டமன்றமன்ற உறுப்பினர் மீதான விசாரணை அறிக்கை பிப்ரவரி 3ஆம் மாநில சட்டத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக பினாங்கு போதைப் பொருள் குற்றப்புலானாய்வுத்துறையின் தலைவர் Mustafa Kamal தெரிவித்தார்.
அந்த சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வருவதா இல்லையா என்பது தொடர்பில் மேல் நடவடிக்கைக்கான பதில் இன்னும் கிடைக்கவில்லையென அவர் தெரிவித்தார்.