Latestமலேசியா

போத்தல்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கு உச்சவரம்பு விலையை நிர்ணயிப்பீர்

கோலாலம்பூர், ஜூன் 11 – போத்தல்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கு உச்சவரம்பு விலையை அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும் என பொருளாதார ஆய்வாளரான Shazali Abu Mansor கோரிக்கை விடுத்துள்ளார்.

போத்தல்களில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெயின் விலை சந்தடி சாக்கில் திடீரென உயர்ந்ததால் பயனீட்டாளர்கள் உட்பட பல தரப்பினர் தங்களது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளனர்.

வீடுகளில் சமையலுக்கு அத்தியாவசிய பொருளாக இருக்கும் போத்தல்களில் அடைக்கப்பட்ட எண்ணெய் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.

உச்சவரம்பு விலையை நிர்ணயிப்பதன் மூலம் விலையேற்றத்தை தடுக்க முடியும் என ஆசிய இணைய பல்கலைக்கழகத்தை சேர்ந்த பொருளாதார நிபுணருமான Shazali Mansor வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!