Latestஉலகம்

அமெரிக்காவில் பாலத்தில் தலைக்கீழாகத் தொங்கிய டிரக் லாரியில் இருந்துக் காப்பாற்றப்பட்டப் பெண்

அமெரிக்கா, மார்ச்-6, அமெரிக்காவில் சாலைத் தடுப்பை மோதி பாலத்தின் ஓரமாக தலைக் கீழாகத் தொங்கிய truck லாரியில் இருந்து, அதன் ஓட்டுநரான பெண் காப்பாற்றப்பட்டுள்ளார்.

கயிற்றால் இழுத்து, ஏணியின் மூலமாக இறக்கி 45 நிமிடங்கள் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு மீட்புக் குழு அப்பெண்ணைக் காப்பாற்றியது.

‘அந்தரத்தில்’ தொங்கிய போதும் அப்பெண் நிதானமாகக் காணப்பட்டதாக மீட்புக் குழு அதிகாரி கூறினார்.

அப்பெண் காயம் எதுவும் இல்லாமல் தப்பிய வேளை, பாலம் தற்காலிகமாக போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது.

Trak லாரி, 23 மீட்டர் ஆழம் கொண்ட ஆற்றில் விழாத வரையில், அப்பெண் அதிர்ஷசாலியே என அந்த அதிகாரி சொன்னார்.

அப்பெண்ணை விரைந்துக் காப்பாற்றிய மீட்புக் குழுவுக்கு மாநகர மேயர் நன்றித் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வேளையில், சம்பவத்தின் போது பாலத்தில் பல வாகனங்கள் மோதிக் கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விபத்தில் சிக்கிய மற்ற வாகனங்களின் ஓட்டுநர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Truck ஓட்டுநர் காப்பாற்றப்பட்டுள்ளதால், ஒஹாயோ ஆற்றின் மேலே பாலத்தில் ஒரு தினுசாக தொங்கிக் கொண்டிருக்கும் லாரியை எப்படி வெளியே எடுப்பது என்பதில் அதிகாரிகளின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!