
கோலாலம்பூர், ஜன 6 – போத்தல் மூடிக்குள் உதடுகள் மாட்டிக் கொண்டு வீங்கிய நிலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேல் வலியால் துடிதுடித்த சிறுவனை, இறுதியில் தீயணைப்பு மீட்பு படையினர் காப்பாற்றினர்.
முன்னதாக 7 வயதுடைய அந்த சிறுவன், தலைநகர், Jalan Jelatek சாலையில் உள்ள கிளினிக்கிற்கு அழைத்து செல்லப்பட்டான். எனினும், அந்த போத்தல் மூடியைக் கழற்ற முடியாமல் போனதை அடுத்து, தீயணைப்பு துறையின் உதவியை அந்த கிளினிக் நாடியது.
அதையடுத்து, அந்த கிளினிக்கிற்கு விரைந்த 6 தீயணைப்பு வீரர்கள், ‘mini grinder’ எனப்படும் சிறப்பு இயந்திரத்தைப் பயன்படுத்தி, அந்த போத்தல் முடியை வெட்டி எடுத்ததாக கோலாலம்பூர், தீயணைப்பு மீட்பு துறையின் நடவடிக்கை அதிகாரி Komander Mohd Rusdi Ibrahim தெரிவித்தார்.