சோல் , ஏப் 12 – தமது நாட்டை சுற்றி இப்போது ஏற்பட்டுள்ள நிலைத்தன்மையற்ற நிலையினால் இப்போது போரில் குதித்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக வட கொரிய அதிபர் kim Jong – Un கூறியுள்ளார் . வட கொரிய நாட்டின் பிரதான ராணுவ பல்கலைக்கழகத்தை பார்வையிட்ட பின் அவர் இதனை தெரிவித்திருக்கிறார். கிம் தலைமையில் அண்மைய ஆண்டு காலமாக ஆயுதங்களை மேம்படுத்திவரும் வட கொரியா, ரஷ்யாவுடன் அரசியல் மற்றும் ராணுவ நட்புறவை வலுப்படுத்தி வருகிறது. மேலும் உக்ரேய்னுக்கு எதிரான பேரில் ரஷ்யாவுக்கு வட கொரியா உதவி வருவதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவும் தென் கொரியாவும் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருவதோடு பதட்டத்தை ஏற்படுத்தி வருவதாகவும் Kim Jong Un குற்றஞ்சாட்டினார்.
Related Articles
Check Also
Close