கோலாலம்பூர், மே 5 – ஜோகூரில் Forest City யில் சூதாட்ட மையம் அமைப்பது பரிசீலிக்கப்படுவதாக செய்தி வெளியிட்ட ஆங்கில இணையத்தள பதிவேட்டின் தலைமை ஆசிரியரிடம் திங்கட்கிழமையன்று போலீசார் வாக்குமூலம் பதிவு செய்வார்கள் என போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ Razarudin Husain தெரிவித்திருக்கிறார். அந்த செய்தி தொடர்பான கட்டுரையில் பிரபல வர்த்தகர் டான்ஸ்ரீ Vincent Tan பெயர் தொடர்புபடுத்தப்பட்டதால் அவரது வழக்கறிஞர் புகார் செய்திருப்பதாக Razarudin கூறினார். சம்பந்தப்பட்ட அந்த இணையத்தள பதிவேட்டின் தலைமை ஆசிரியர் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறை பிரிவுக்கு காலை 11 மணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
அந்த செய்தி பொய்யான அறிக்கை என்பதோடு அதில் உண்மையின்றி ,காரணம் இல்லாமல் அந்த வெளியிடப்பட்தோடு அதனை உறுதிப்படுத்தவும் இல்லையென Razarudin தெரிவித்தார். நிந்தனை சட்டம் 4ஆவது விதி உட்பிரிவு (1) , குற்றவியல் சட்டத்தின் 500ஆவது பிரிவு மற்றும்
1998 ஆம் ஆண்டின் தொடர்பு, மலேசிய பல்லூடக சட்டத்தின் 233 ஆவது விதியின் கீழ் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இந்த விவகாரம் தொடர்பில் சில தனிப்பட்ட நபர்களான Vincent Tan, Genting குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி
டான்ஸ்ரீ Lim Kok Thay போன்ற வத்தகர்களிடமும் வாக்கு மூலம் பதிவு செய்யப்படும் என Razarudin விவரித்தார்.