
நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில், சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில், புரோட்டோன் வீரா ரக காரை மறித்து நின்ற பெண் ஒருவரை, உடனடியாக போர்ட் டிக்சன் போலீஸ் தலைமையகத்திற்கு வந்து அது குறித்து விளக்கமளிக்குமாறு போலீஸ் அழைப்பு விடுத்துள்ளது.
நேற்று காலை மணி 9.43 வாக்கில், நிகழ்ந்த அச்சம்பவம் தொடர்பான காணொளி, @bckupacc99 எனும் ட்விட்டர் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து வைரலானதாக, போர்ட் டிக்சன் போலீஸ் துணைத் தலைவர் டெபுடி சுப்ரிடெண்டன் முஹமட் முஸ்தபா உசைன் தெரிவித்தார்.
சாலையில் காரை மறித்து நிற்பது, சம்பந்தப்பட்ட நபருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்பதோடு, மற்றவர்களுக்கு அது பீதியை ஏற்படுத்தும்.
அச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொதுமக்களும் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.