Latestமலேசியா

போர்டிக்சன் சிப்பி வகைகள் உண்பதற்கு பாதுகாப்பானவை அல்ல; மீன்வளத்துறை உறுதிப்படுத்தியது

போர்டிக்சன், ஏப்ரல்-5, போர்டிக்சன் கரையோரப் பகுதியில் கிடைக்கும் சிப்பிகள் உண்பதற்குப் பாதுகாப்பானவை அல்ல என்பதை மலேசிய மீன்வளத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக Pasir Panjang-கில் உள்ள Kampung Telok மற்றும் Sungai Sekawang-கில் கிடைக்கும் சிப்பிகள் biotoxin நச்சுத்தன்மைக் கொண்டவை என அத்துறையின் துணை இயக்குனர் Wan Muhammad Aznan Abdullah சொன்னார்.

சம்பந்தப்பட்ட பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட சிப்பி மாதிரிகள் ஆய்வுக்கூட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், அவை உண்பதற்கு பாதுகாப்பானவை அல்ல என கண்டறியப்பட்டது என்றார் அவர்.

இதையடுத்து தற்போதைக்கு போர்டிக்சன் கடல்பகுதியில் இருந்து lala, kerang, lokan உள்ளிட்ட சிப்பி வகைகளை எடுக்க வேண்டாம் என பொது மக்களை அவர் அறிவுறுத்தினார்.

சந்தைகளிலும் அவற்ற விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான மற்றப் பகுதிகளில் அவற்றை விற்க தடையில்லை; ஆனால் அவை பாதுகாப்பானைவை தானா என்பதை மீன்வளத்துறையிடம் அவர்கள் முதலில் உறுதிச் செய்து கொள்ள வேண்டும்.

இவ்வேவையில் போர்டிக்சன் கடல் பகுதியில் கிடைக்கும் மீன்கள், கனவாய் போன்ற மற்ற கடல் உணவுகளுக்குப் பாதிப்பில்லை; அவை உண்பதற்கு பாதுகாப்பானதே என Wan Muhammad கூறினார்.

எனவே அப்பகுதி வாழ் மக்கள் குறைந்தது அடுத்த 20 நாட்களுக்காவது சிப்பி வகைகளை உண்ண வேண்டாம் என்றும், சிப்பிகளில் நச்சளவு குறைந்து அவை சாப்பிட பாதுகாப்பானது என உறுதிபடுத்தப்பட்டதும் முறையாக அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

போர்டிக்சனில் சிப்பிகளை உண்டதால் இதுவரை 9 பேர் நச்சுணவுப் பாதிப்புக்கு ஆளான வேளை, அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!