Latestமலேசியா

போர்ட்டிக்சனில், வேப் கடைக்கு தீ வைத்த கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

சிரம்பான், டிசம்பர் 20 – நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சன், தாமான் ரியாவிலுள்ள, “வேப்” மின்னியல் சிகிரெட் கடைக்கு தீ வைத்தாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கும்பலை, போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.

அச்சம்பவம் தொடர்பான காணொளிகள், X சமூக ஊடகத்தில் வைரலாகியுள்ளதை அடுத்து, அதில் சம்பந்தப்பட்டவர்கள் தேடப்படுகின்றனர்.

நேற்று மாலை மணி 6.30 வாக்கில், @anthraxxx781 எனும் X சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட, அந்த ஒரு நிமிடம் 18 வினாடி மற்றும் 15 வினாடி காணொளிகளை போலீஸ் அடையாளம் கண்டுள்ளதாக, போர்ட் டிக்சன் போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஐடி ஷாம் முஹமட் தெரிவித்தார்.

கடந்த திங்கட்கிழமை இரவு மணி 9.50 வாக்கில், சம்பந்தப்பட்ட வேப் கடைக்கு தீ வைக்கப்பட்ட வேளை ; தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் உதவியுடன் தீ முற்றாக அணைக்கப்பட்டது.

அந்த தீச் சம்பவத்தினால், 50 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ள வேளை ; அதில் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காணும் பணிகளை போலீஸ் முடுக்கி விட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!