Latestமலேசியா

போர்ட் கிள்ளான் நகைக்கடையில் ஒரே நிமிடத்தில் 27,000 ரிங்கிட் மதிப்பிலான நகைகளுடன் கம்பி நீட்டியக் கொள்ளையன்

கிள்ளான் துறைமுகம், ஜூன்-15 – சிலாங்கூர், Port Klang-கில் உள்ள நகைக் கடையொன்றில் மேற்கொள்ளப்பட்ட துணிகரக் கொள்ளையில், கைத்துப்பாக்கி ஏந்திய ஆடவன் வெறும் ஒரே நிமிடத்தில் 27,000 ரிங்கிட் மதிப்பிலான நகைகளுடன் கம்பி நீட்டினான்.

நேற்று மாலை 4.15 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

துப்பாக்கி முனையில் பாதுகாவலரைப் பிடித்து வைத்து உள்ளே சென்றவன்,  தரையை நோக்கி 2 முறை சுட்டதில்  பொது மக்கள் தலைத் தெரிக்க ஓடினர்.

அங்கிருந்த பணியாளர்களிடம் நகைகளை எடுத்துத் தருமாறு அவன் கேட்க அவர்களோ அடிபணியவில்லை.

இதனால் மேசையில் இருந்த இரு காப்புகளையும் ஒரு தங்கச் சங்கிலியையும் தானாகவே எடுத்துக் கொண்டவன்,  வாடிக்கையாளர்களுக்குச் சொந்தமான 2 கைப்பைகளையும் அபகரித்துக் கொண்டு நீல நிற Yamaha Y15 மோட்டார் சைக்கிளில் தப்பியோடினான்.

அச்சம்பவத்தில் நகைக்கடை பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் என எவரும் காயமடையவில்லை.

சிவப்பு நிற சட்டையும் தலைக்கவசமும் அணிந்திருந்த கொள்ளையனுக்கு எதிராக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!