Latestமலேசியா

போர்ட் டிக்சனில் நிகழ்ந்த விபத்தில் 3 இந்தியர்கள் பலி

போர்ட் டிக்சன், பிப் 14 – போர்ட் டிக்சனை நோக்கிச் செல்லும் சிரம்பான் – போர்ட் டிக்சன் நெடுஞ்சாலையில் 2 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்கள் 35 வயது ஆர். மோகனா, 51 வயது எம்.பங்கஜவள்ளி, 16 வயது எஸ், ஜெகனாத் என அடையாளம் காணப்பட்டிருப்பதாக , போர்ட் டிக்சன் மாவட்ட போலீஸ் தலைவர் அய்டி ஷாம் மொஹமெட் ( Aidi Sham Mohamed ) தெரிவித்தார்.

அந்த மூவரும், Toyota Hilux வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளான Toyota Camry காரில் பயணித்தவர்கள் என அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில் அக்காரை ஓட்டிய எஸ். சண்முகம், அவரோடு பயணித்த எஸ். தீபன் குமார் , எல். வினிஷா ஆகியோருக்கு கையிலும், விலா எலும்பிலும் முறிவு ஏற்பட்டதாக அவர் கூறினார்.

விபத்துக்குள்ளான Toyota Camry காரில் பயணித்த அனைவரும் , சிலாங்கூர் அம்பாங்கைச் சேர்ந்தவர்கள் எனவும் அய்டி ஷாம் தெரிவித்தார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!