
சிரம்பான், நவ 18 – போர்ட்டிக்சன் அருகே, வீடு ஒன்றிலிருந்து நோயாளியை ஏற்றச் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி, கஞ்சில் ரக காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
கஞ்சில் காரில் பயணித்த 48 வயது பெண்ணும் அவரது 10 வயது மகளும் சிறு காயங்களுக்கு உள்ளான வேளை ஆம்புலன்ஸ் வண்டியின் 43 வயது ஓட்டுனரும், மருத்துவ உதவியாளரும் காயமின்றி உயிர் தப்பினர். காரில் பயணித்த மற்றுமொரு 7 வயது மகளுக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
போர்ட்டிக்சன் மருத்துவமனையில் அவரச அழைப்பு கிடைக்க தாமான் மேகா ஷெல்கேட் வீடமைப்பு பகுதிக்குச் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி, அங்கு சாலையில் திடிரென புகுந்த கஞ்சில் காரின் பின்பகுதியை போதியதில் கார் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.