Latestமலேசியா

போர்னியோ வருகையின்போது பேரரசருக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு கடிதத்திற்கும் அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கும் – அன்வார் தகவல்

கோலாலம்பூர், செப் 17 – தமது Kembara Kenali Borneo வருகையின்போது மாட்சிமை தங்கிய பேரரசர் Sultan Abdullah Sultan Ahmad Shah பெற்ற ஒவ்வொரு கடிதத்தையும் அரசாங்கம் கவனிக்கும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் உறுதியளித்திருக்கிறார். சபா மற்றும் சரவா மக்கள் தங்கள் மீது காட்டிய பற்று மற்றும் பரிவு குறித்து உண்மயிலேயே நெகிழ்ந்திருப்பதாக வியாழக்கிழமை தம்மை சந்தித்தபோது பேரரசரும் , பேரரசியார் Tunku Azizah Aminah Maimunah வும் தம்மிடம் கூறியதாக Anwar தெரிவித்தார். பேரரசரின் சுற்றுப்பயணத்தின்போது மக்கள் தங்களது மனக்குறைகளை தெரிவித்து எழுதிய அனைத்து கடிதங்களையும் பேரரசர் தம்மிடம் தெரிவித்திருப்பதாகவும் பிரதமர் என்ற முறையில் அதனை தாம் கவனிக்கும் கடப்பாட்டை கொண்டுள்ளதாக அன்வார் தெரிவித்தார். நேற்றிரவு கூச்சிங் ஒற்றுமை விளையாட்டங்கில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது பிரதமர் அன்வார் இதனை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!