சென்ட் பீட்டர்ஸ்பெக், பிப் 28 – உக்ரைய்னுக்கு எதிரான போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும்படி ரஷ்ய மக்கள் நாடு தழுவிய நிலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தின் எச்சரிக்கையைம் மீறி மறியலில் ஈடுபட்ட 2,000த்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரான சென்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் 200க்கும் மேற்பட்டோர் கைதாகினர்.
அவர்களில் பலர் போர் வேண்டாம். உக்ரெய்னில் அமைதி வேண்டும் என்ற பதாகைகளையும் கையில் ஏந்தியிருந்தனர். ரஷ்யா முழுவதிலும் உள்ள 45 நகர்களில் கூடிய மக்கள் உக்ரைய்ன் படையெடுப்புக்கு எதிராக வெளிப்படையாகவே தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.