கோலாலம்பூர், ஆகஸ்ட்-27 – தேசிய தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு அரச மலேசிய ஆகாயப் படை, சிலாங்கூரிலும் புத்ராஜெயாவிலும் வான் பயிற்சியில் ஈடுடவிருக்கின்றது.
இன்று தொடங்கும் அப்பயிற்சிகளில் போர் விமானங்கள், சரக்கு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் குறைந்த உயரத்தில் பறந்து பயிற்சியில் ஈடுபடும்.
ஆகஸ்ட் 31 தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வின் போது, வான் சாகசங்களைப் புரிய ஆயுதப்படைக்குப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், அதற்கு ஒத்திகையாக அப்பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே, வானில் போர் விமானங்கள் குறிப்பாக மலேசிய ஆயுதப்படையின் விமானங்கள் சற்று தாழ்வாகப் பறப்பதைக் கண்டால் பதற்றமடைய வேண்டாமென பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.