
கோலாலம்பூர், மார்ச் 23 – கோலாலம்பூரில் , கிளப்பொன்றில், பெண்கள் உள்ளாடையில் கட்டுமஸ்தான தாய்லாந்து ஆடவர்கள் படைக்க திட்டமிட்டிருந்த நிகழ்ச்சி, போலீஸ் எச்சரிக்கைக்குப் பின்னர் ரத்து செய்யப்பட்டது.
மார்ச் 30 -ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சி தொடர்பில் நேற்று மாலை மணி 4 வரையில், 60 போலீஸ் புகார்கள் பெறப்பட்டதாக, வங்சா மாஜு (Wangsa Maju) மாவட்ட போலீஸ் தலைவர் அசாரி அபு சாமா ( Ashari Abu Samah) தெரிவித்தார்.
‘Thai Hot Guy’ எனப்படும் தாய்லாந்து ஆடவர் குழுவினரின் நிகழ்ச்சி தொடர்பான தகவல் சமுக வலைத்தளங்களில் வைரலாகி, பல தரப்பட்ட மக்களின் கண்டனத்தைப் பெற்றிருந்தது. அதையடுத்து போலீஸ் எச்சரிக்கைக்கு கட்டுப்பட்டு அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய அந்த கிளப் ஒப்புக் கொண்டதாக Ashari Abu Samah தெரிவித்தார்.