
புத்ராஜெயா, ஏப் 3 – அந்நிய நாட்டவர்கள் உட்பட போலி அடையாளத்தைப் பயன்படுத்தி சுமார் 46,000 பேர் , SPA -பொதுச் சேவை ஆணையத்தில் தங்களைப் பதிய முயன்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
2020 முதல் கடந்த மார்ச் மாதம் வரையில், பொய்யான அடையாளத்தைக் கொண்டு பதிய முற்பட்ட அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டதாக பொது சேவைத் துறை ஆணையத்தின் தலைவர் டான் ஶ்ரீ சய்னால் ரஹிம் செமான் ( Tan Sri Zainal Rahim Seman) தெரிவித்தார்.
இவ்வாறு, SPA முறைக்குள் நுழைய முயற்சிக்கும் தரப்பினர் முதல் கட்ட தணிக்கையிலே கண்டறியப்பட்டு நீக்கப்படுவர்.
அடையாள அட்டைகளின் எண்களை சரிபார்க்கும் SPA- வின் தொழில்நுட்ப முறையைக் கொண்டு, தொடக்கத்திலே அதுபோன்ற ஏமாற்றுச் செயல்களை கண்டறிய முடிந்திருப்பதாக Tan Sri Zainal தெரிவித்தார்.