பெட்டாலிங் ஜெயா, ஜன 8 – போலி ஆவணங்கள் தொடர்பான ஒரு குற்றச்சாட்டை மூடி மறைக்க 20,000 ரிங்கிட்டை கையூட்டாக கேட்டதன் தொடர்பில் அரசு அதிகாரிகளில் இருவரை சிலாங்கூர் எம்.எ.சி.சி கைது செய்தது. 4, 000 ரிங்கிட் வாடகை உடன்பாட்டில் போலீ ஆவணங்களை பயன்யடுத்தியது தொடர்பில் ஆடவர் ஒருவரிடம் அந்த இரண்டு அரசு அதிகாரிகளும் கையூட்டு கேட்டதாக நப்பப்படுகிறது. முதல் சந்தேகப் பேர்வழி நேற்று மாலை மணி 4 அளவில் ஒரு உணவகத்தில் கைது செய்யப்பட்டார். இரண்டவது சந்தேகப் பேர்வழி மாலை மணி ஆறு அளவில் கோம்பாக் வட்டாரத்தில் கைது செய்யப்பட்டார்.
Related Articles
Check Also
Close