Latestமலேசியா

போலி கணக்குகளைக் கொண்ட சமூக வலைத்தலங்களுக்கு பாதுகாப்பு படையினர் பின்னணியா – போலீஸ் மறுப்பு

கோலாலம்பூர், ஆக 6 – இந்நாடு தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கு போலி கணக்குகளைக் கொண்ட சமூக வலைத்தளங்களை கையாள்வதில் பாதுகாப்பு படையினர் பின்னணியாக இருப்பதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்களை போலீஸ் மறுத்துள்ளது. தொழிற்நுட்ப நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ள அந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து போலீஸ் கடுமையாக கருதுவதாக போலீஸ் செயலாளர் டத்தோ Norsiah Mohd Saaduddin தெரிவித்தார். சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகள் செயல்பட்டு வருவதாகவும் அந்த கணக்குகளுக்கும் போலீசிற்கும் தொடர்பு இருப்பதாக Meta Platform Incorporated company வெளியிட்டிருக்கும் அறிக்கையை போலீஸ் கடுமையாக கருதுவதாக டத்தோ Norsiah தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேல் விவரங்கள் திரட்டப்படுவதாகவும் நேற்றிரவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!