
கோலாலம்பூர், ஜன 19 – Datuk மற்றும் Datuk Sri போலி விருதுகளைப் பயன்படுத்தும் 29 தனிப்பட்ட நபர்களின் பெயர்களைப் பொது அறிக்கை ஒன்றில் Pahang அரசாங்கம் வெளியிட்டுள்ளது. Pahang sultan னிடமிருந்து டத்தோ மற்றும் டத்தோஸ்ரீ விருதுகளைப் பெற்றவர்கள் குறித்த போலி பட்டியல் வெளியாகியுள்ளதாக பகாங் Darul Makmur அரசாங்கம் வெளியிட்டதை தொடர்ந்து இந்த நோட்டிஸ் வெளியிடப்பட்டது. தமது அலுவலகம் 29 தனிப்பட்ட நபர்களின் பெயர்களை மட்டுமே வெளியிட்டதாகவும் ஆனால் அவர்களுக்கு எதிராக வேறு நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லையென Pahang மாநில செயலாளர் Sallehuddin Ishak தெரிவித்தார்.
மாநில அரசாங்கத்தின் இரண்டு முன்னாள் செயலாளர்கள் அனுமதியின்றி அகப்பக்கத்தில் விருதுகள் பெறும் பெயர் பட்டியலில் மாற்றங்களை செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக டிசம்பர் 28 ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 30 மற்றும் 36 வயதுடைய அந்த இரண்டு நபர்களும் தங்களது அடையாளக் கார்டு எண்களை பயன்படுத்தி விருதுக்கு முன்மொழியப்படாதவர்களின் பெயர்களை இணைத்த தகவலும் வெளியாகின. அந்த இருவருக்கும் தலை 5,000 ரிங்கிட் ஜாமினை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.