Latestமலேசியா

போலி பணக் கோரிக்கை தொடர்பில் நிதி வியூக ஆலோசகரான டத்தோ ஸ்ரீ பிரமுகரை MACC கைது செய்தது

கோலாலம்பூர், ஜூலை 11 – சுமார் 150,000 ரிங்கிட் மதிப்புள்ள நிறுவன இணைப்பு பணிகளுக்காக போலி பணக் கோரிக்கையை சமர்ப்பித்த சந்தேகத்தின் பேரில் நிதி வியூக ஆலோசகரான டத்தோஸ்ரீ பிரமுகர் ஒருவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்தது. ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணியளவில் MACC அலுவலகத்தில் கைது செய்யப்பட்ட சுமார் 50 வயதுடைய அந்த ஆடவர் புதன்கிழமைலிருந்து விசாரணைக்காக இம்மாதம் 12 ஆம்தேதிவரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக MACC தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டு அந்த நபர் போலி பணக் கோரிக்கைகளை சமர்ப்பித்ததாக நம்பப்படுகிறது. இதனிடையே அந்த டத்தோஸ்ரீ பிரமுகர் கைது செய்யப்பட்டதை MACC சியின் விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குனர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் ஹசிம் உறுதிப்படுத்தினார். 2009ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 18 ஆவது விதியின் கீழ் அந்த நபருக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!