செப்பாங், அக்டோபர்-15 – போலி பெர்மிட்டுகளைப் பயன்படுத்தி 2 ராட்வீலர் (Rottweiler) நாய்களை ஹாலந்திலிருந்து இந்நாட்டுக்குள் கடத்தும் முயற்சியை, மலேசியத் தனிமைப்படுத்தல் சேவை மற்றும் சோதனை அமுலாக்கத் துறை (Maqis) முறியடித்துள்ளது.
போலி பெர்மிட்டைக் காட்டி அவ்விரு நாய்களும் இந்நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதை, சிலாங்கூர் Maqis கண்டறிந்தது.
இதையடுத்து KLIA விமான நிலையத்திலேயே அவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம் மற்றும் ஈராண்டுகள் சிறைத் தண்டனையைக் கொண்டு வரக் கூடிய, தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.
Rottweiler, German Shepherd, Doberman, Bullmastiff, Bull Terrier, Perro De Presa Canario போன்ற வெளிநாட்டு நாயினங்களைக் கொண்டு வர விரும்புவோர், சிறப்புப் பெர்மிட்டுகளைப் பெற வேண்டியது கட்டாயமாகும்.
அவை கட்டுப்படுத்தப்பட்ட நாய்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும்.