
கோலாலம்பூர், மார்ச் 8 – போலி முத்திரை பொருட்களை விற்கும் சொர்க்க தளமாக, உலகின் 33 பகுதிகளில் ஒன்றாக தலைநகரில் உள்ள Jalan Petaling குறிப்பிடப்பட்டுள்ளது.
USTR – எனப்படும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் , தான் மேற்கொண்டிருந்த ஆய்வில் அதனைக் குறிப்பிட்டிருக்கிறது.
அப்பகுதியில் பிரபல போலி முத்திரைகளைக் கொண்ட கைக் கடிகாரம், காலணி, கைப்பை, கருப்பு கண்ணாடி உட்பட மேலும் இதர பொருட்கள் விற்கப்படுவதாக , அந்த அலுவலகம் அதன் ஆய்வில் கூறியுள்ளது.
மேலும், போலி முத்திரை கொண்ட பொருட்களின் விற்பனையை ஒடுக்குவதில் உரிய நடவடிக்கையை எடுக்கத் தவறியிருக்கும் அதிகாரத்துவ தரப்பும் அந்த ஆய்வில் குறை கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, அந்த குற்றச்சாட்டு உண்மையில்லை என கோலாலம்பூர் சிறுவியாபாரிகள் சங்கத்தின் தலைவர் Datuk Ang Say Tee கூறியுள்ளார்.
Jalan Petaling- கில் 10 -லிருந்து 20 விழுக்காடு வரையிலான போலி பொருட்கள் மட்டுமே விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.