Latestஉலகம்

போலி முதலை என நினைத்து செல்ஃபி எடுத்த ஆடவரைத் நிஜ முதலை தாக்கியது

மனிலா, நவ 25- பிலிப்பைன்ஸ், பொதுப் பூங்காவில் நிஜ முதலை எனத் தெரியாமல் அதனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த ஆடவரை அம்முதலை கடுமையாகத் தாக்கியிருக்கின்றது.

Nehemias Chipada எனும் 68 வயதான அந்த ஆடவர், பொதுப் பூங்கா குளத்தில் போலியான பிளாஸ்டிக் முதலை வைக்கப்பட்டிருப்பதாக நினைத்து அதனுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். எனினும், எதிர்பாராவிதமாக அந்த முதலை அவரின் இடது பக்கக் கையை கவ்வியபோதே அது நிஜ முதலை என்பதை சுற்றியுள்ளவர்கள் உணர்ந்தனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய Nehemias தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முதலை குறித்து எந்தவித அபாய பலகையும் பூங்கா நிர்வாகம் வைக்காத்தால் இச்சம்பவம் நேரிட்டதாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!