குவாலா சிலாங்கூர், பிப் 23 – குடும்பத்தாருடன் கோபித்துக் கொண்டு பிரச்சனையை ஏற்படுத்திய மனநலம் பாதிக்கப்பட்ட ஆடவர் ஒருவர் , போலீசார் விரட்டியதில் நிர்வாணமாக ஓடி வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் குதித்த சம்பவம் Kuala Selangor , Bukit Cherakah கிராமத்தில் நிகழ்ந்திருக்கிறது.
29 வயது மதிக்கத்தக்க அந்த ஆடவரை மீட்கக் கோரி , போலிசாரிடம் இருந்து நேற்று மாலை மணி 6.12-க்கு அவசர அழைப்பு வந்ததாக, சிலாங்கூர் தீயணைப்பு மீட்பு படையின் இயக்குநர் Norazam khamis தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், அந்த ஆடவரைத் தண்ணீர் தொட்டிக்குள் இருந்து வெளியேற்ற சுமார் 45 நிமிடங்கள் வரை எடுத்துக் கொண்டதாக அவர் கூறினார்.