Latestமலேசியா

போலீசாரை பாராங் கத்தி கொண்டு தாக்க முற்பட்ட ஆடவன் சுட்டுக் கொலை

கோத்தா பாரு, செப் 22 – கிளந்தான், கோத்தா பாருவில், போலீசாரை பாராங் கத்தி கொண்டு தாக்க முற்பட்ட ஆடவன் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். ஜெராம் பெர்டா (Jeram Perdah) இரகசிய பாதை வாயிலாக, நாட்டிற்குள் அவன் கள்ளக் குடியேறிகளை கடத்த முற்பட்ட போது அச்சம்பவம் நிகழ்ந்தது. பின்னிரவு மணி 1.40 வாக்கில், ஒப்ஸ் வவசான் சோதனை நடவடிக்கையின் போது இடது தோல் பட்டையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவ்வாடவன் உயிரிழந்தான்.

முன்னதாக, தாய்லாந்திலிருந்து ஆற்றை கடந்து கள்ளக்குடியேறிகள் சிலர் நாட்டிற்கு நுழைய முற்பட்டதை PGA பொது நடவடிக்கை பிரிவு வீரர்கள் கண்டதாக, கிளந்தான் இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் சாக்கி ஹரூன் தெரிவித்தார்.

சம்பவத்தின் போது, சம்பந்தப்பட்ட ஆடவனை போலீசார் தடுத்து நிறுத்த முற்பட்டனர். எனினும், அவன் பாராங் கத்தியுடன் போலீசை நோக்கி ஓடி வந்ததால், பாதுகாப்பு கருதி அவனை சுட வேண்டிய நிலை ஏற்பட்டதாக டத்தோ முஹமட் சாக்கி சொன்னார். சம்பந்தப்பட்ட ஆடவன் சிகிச்சை பலனின்றி பாசிர் பாஸ் மருத்துவமனையில் உயிரிழந்தான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!