Latestமலேசியா

எம்.ஏ.சி.சியும் பெட்ரோனாஸ்சும் பேரரசருக்கு பதில் அளிக்கும் பொறுப்பை கொண்டிருக்க வேண்டும் – சுல்தான் இப்ராஹிம் வலியுறுத்து

கோலாலம்பூர், டிச 11 – எம்.ஏ.சி.சி எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் மற்றும் பெட்ரோனாஸ் நேரடியாக பேரரசருக்கு பதில் அளிக்கும் பொறுப்புணர்வை கொண்டிருக்க வேண்டுமே தவிர நாடாளுமன்றத்திற்கு அல்ல என அடுத்த பேரரசராக பதவியேற்கவிருக்கும் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார்  விரும்புகிறார்.

எம்.ஏ.சி.சி மற்றும் பெட்ரோனாஸின் நேரடி மேற்பார்வை உட்பட அதிக பொறுப்புகளைக் அடுத்த பேரரசர் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

லஞ்ச ஊழலை முழுமையாக துடைத்தொழிக்க விரும்புதாக என்.எஸ்.டிக்கு வழங்கிய நேர்க்கணாலில் அவர் தெரிவித்தார்.

எனது தாத்தாவிடமிருந்து, நாங்கள் சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறோம். நிர்வாகத்தில் இருக்கும்போது அதன் சிறந்த பயனை மக்களுக்கு கொண்டு வரவேண்டும் என்பதோடு ஊழல்வாதிகளை துடைத்தொழிக்க வேண்டும் என்ற இலக்கை தாம் கொண்டிருப்பதாக சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

எனவே, நாடாளுமன்றத்திற்கு பதிலாக எம்.ஏ.சி.சியும் தேசிய எண்ணெய் நிறுவனமும் பேரரசருக்கு பதில் சொல்லும் பொறுப்புணர்வை கொண்டிருப்பதன் மூலம் அதன் சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சுல்தான் இப்ராஹிம் தனது நேர்காணலில், செயல்பாட்டிலிருந்து எஸ்ஸ்குடிப் எனப்படும் அரசாங்க நிர்வாக தரப்பினரான விலக்கி மேலும் சுதந்திரமான நீதித்துறை நியமனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.

தற்போது, ​​நீதிபதிகள் நியமனக் குழு ‘JAC’ நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கிறது. அக்குழுவின் உறுப்பினர்களில் ஐவரை பிரதமர் நியமிக்கிறார்.

மீதமுள்ள நான்கு இடங்கள் நீதிபதிகளால் நிரப்பப்படுகிறது. ஆட்சியாளர்கள் மாநாட்டின் போது பிரதமர் அலுவலகத்தில் இருந்து அந்த உறுப்பினர்களுக்கான பட்டியலை ஆட்சியாளர்கள் பெறுகின்றனர்.

அந்த உறுப்பினர்களை நியமிக்கும் முன் அந்த பெயர் பட்டியலை ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.

நாங்கள் ஒன்றும் ரப்பர் முத்திரை அல்ல என்றும் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!