Latestமலேசியா

போலீசின் அதிரடி நடவடிக்கையால் சட்டவிரோதமாக செயல்பட்ட மின்கழிவுகள் மையம் முடிவுக்கு வந்தது

கோலாலம்பூர், மார்ச் 21 – ஐந்து ஆண்டுகளாக, Banting. Teluk Panglima Garang கில் உள்ள செம்பனை தோட்டத்தில் தோட்டத்தில் சட்டவிரோத மின் கழிவுகளை பதப்படுத்தும் மையமாக செயல்பட்டுவந்த நான்கு கால்பந்து மைதானங்களின் அளவுள்ள தொழிற்சாலை மூடப்பட்டது. 2019 ஆம் ஆண்டு முதல் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த ரகசியத் தொழிற்சாலையானது, டன் கணக்கில் கழிவுகளை பதப்படுத்தி, மதிப்புமிக்க உலோகங்களான யுரேனியம், தங்கம், தாமிரம் மற்றும் ஈயம் போன்றவற்றை பிரித்தெடுப்பதில் லட்சக் கணக்கான ரிங்கிட் லாபம் ஈட்டியுள்ளதாக நம்பப்படுகிறது. செவ்வாக்கிழமை புக்கிட் அமான் போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த தொழிற்சாலை மூடப்பட்டதோடு 50 பேர் கைதுசெய்யப்பட்டனர் . அங்கு பெரிய குப்பைக் குவியல்களை கண்டுப்பிடித்த போலீசார் , திருடப்பட்டதாக நம்பப்படும் 156,000 ரிங்கிட் மதிப்புள்ள ஐந்து டன் டெலிகாம் மலேசியா தொலைத்தொடர்பு கேபிள்களையும் போலீசார் பறிமுதல் செய்ததாக நம்பப்படுகிறது.

குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவு மேற்கொண்ட நான்கு மாத விசாரணை மற்றும் கண்காணிப்புக்குப் பிறகு அங்கு சோதனை நடத்தப்பட்டதாக முதன்மை உதவி இயக்குனர் SAC டத்தோ எஸ். சண்முகமூர்த்தி சின்னையா தெரிவித்தார். வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் சீன நாட்டவர்கள் அடங்கிய 49 வெளிநாட்டு ஊழியர்களுடன் தொழிற்சாலையின் மேலாளராக இருந்த 38 வயதான நபரும் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத தொழிலாளர்கள் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர்கள் குடிநுழைவு துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த தொழிற்சாலை மதிப்புமிக்க உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்காக டன் கணக்கில் தூக்கி எறியப்பட்ட தொலைத்தொடர்பு சர்க்யூட் போர்டுகள் மற்றும் பிற திட்டமிடப்பட்ட கழிவுகளை வாங்கியதும் கண்டறியப்பட்டதாக சண்முகமூர்த்தி தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!