ஒட்டாவா, பிப் 21 – டிரக் ஓட்டுனர்களுக்கு எராக கனடா மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து ஒரு மாதங்களுக்குப் பிறகு தலைநகர் Ottawa மற்றும் இதர தெருக்களில் அமைதி ஏற்பட்டுள்ளது.
கலகத் தடுப்பு போலீசார் விடுத்த கடுமையான எச்சரிக்கையை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட டிரக் ஓட்டுனர்கள் தங்களது டிரக்குகளை அப்புறப்படுத்தினர்.
எல்லையை கடக்கும் டிரக் ஓட்டுனர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவை கண்டித்து டிரக் ஓட்டுனர்கள் ஜனவரி 29 ஆம் தேதி முதல் நகரின் முக்கிய பகுதியில் தங்களது வாகனங்களை நிறுத்தி வைத்து மறியலில் ஈடுபட்டு வந்தனர்.
பாதுகாப்பு மண்டலப் பகுதியில் மறியலில் ஈடுபட்டதான் தொடர்பில் 191 பேர் கைது செய்யப்பட்டனர், 79 வாகனங்களையும் போலீசார் இழுத்துச் சென்றனர்.