Latestஇந்தியா

போலீஸ்காரரை தாக்கும் சதியில் ஈடுபட்ட தெக்குவாண்டோ வீரர் கைது

புதுடில்லி, ஜன 13 – பிரபல தெக்குவாண்டோ வீரர் ஒருவர் குண்டர் கும்பல் தலைவனாக மாறியதோடு போலீஸ்காரரை தாக்குவதற்கான சதியில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் கைது செய்யப்பட்டார். ஹர்யனாவைச் சேர்ந்த 41 வயதுடைய Ajay Gurjar @ Bhai டில்லிக்கு அருகே கைதுசெய்யப்பட்டார். தெக்குவாண்டோவில் கருப்பு பெல்ட் வைத்திருப்பவரான Ajay அனைத்துலக போட்டிகளில் கலந்துகொண்டிருப்பதோடு இந்திய தேசிய தெக்குவாண்டோ போட்டியில் 8 தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார். திஹார் சிறையின் துணை சூப்பிரடன்டனை கொலை செய்வதற்கான சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்டதன் தொடர்பில் Ajay கைது செய்யப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர். அவரிடமிருந்து ஒரு துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!