Latestமலேசியா

போலீஸ்காரரை மோத முயன்ற வேன் ஓட்டுனர் கைது

பாயன் லெப்பாஸ், ஜூலை 10 – பினாங்கு   துன் டாக்டர் லிம்   சொங்  இயூ  (Tun Dr Lim Chong Eu) நெடுஞ்சாலையில்  சோதனை நடவடிக்கையின்போது போலீஸ்காரர் ஒருவரை   மோத முயன்ற வேன் ஓட்டுனரை போலீசார்  துரத்திப் பிடித்தனர்.  சுமார்  5 கிலோமீட்டர் அந்த வேனை   துரத்திச் சென்று  அதன் டயரில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் அந்த வேன் சாலையோரத்தில் கவிழ்ந்ததைத்  தொடர்ந்து  36 வயது ஆடவன் கைது செய்யப்பட்டான்.   

போக்குவரத்து போலீஸ்  கிளையைச் சேர்ந்த  போலீஸ் குழுவினர் இன்று காலை  8 மணியளவில் வர்த்தக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக  பினாங்கு   Barat Daya  மாவட்ட போலீஸ் தலைவர்   கமாருல்   ரிஷால்  ஜெனால்  ( Kamarul Rizal Jenal ) வெளியிட்ட அறிக்கையில்    தெரிவித்தார். 

  இந்த சம்பவத்தின்போது அந்த  சந்தேகப் பேர்வழி ஓட்டிச் சென்ற வேன்  சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு வேனில் மோதியது . அந்த ஆடவன் வாகனம் ஓட்டும் லைசென்ஸ்சை கொண்டிருக்கவில்லை என்பதோடு   Methamphetamine  போதைப் பொருளை பயன்படுத்தியிருப்பதும் அவனிடம் மேற்கொள்ளப்பட்ட   சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்ததாக அவர்  கூறினார். கொலை செய்ய  முயன்றது மற்றும் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் தண்டனை சட்டம் 307 ஆவது  விதியின் கீழ் அந்த ஆடவன் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!