போலீஸ்கார்கள்போல் நடித்து வழிப்பறி இருவர் கைது
கோலாலம்பூர், பிப் 2 – பண்டான் இன்டா மற்றும தாமான் மூடாவில் இரண்டு வெவ்வேறு சம்வங்களில் போலீஸ்காரர்களைப் போல் நடித்து வெளிநாட்டினரிடம் கொள்ளையிட்ட உள்நாட்டைச் சேர்ந்த இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். தாமான் பெர்மாத்தாவில் வீடு ஒன்றில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டிருந்த வெளிநாட்டைச் சேர்ந்த தொழிலாளரை மிரட்டி அவரிடம் வழிப்பறி கொள்ளையடித்தனர். 100 ரிங்கிட் ரொக்கத்துடன் கை தொலைபேசியையும் அவர்ள் கொள்ளையடித்துள்ளனர். . இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து அந்த இரண்டு நபர்களும் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Mohamad farouk Eshak கூறினார். கைது செய்யப்பட்ட 55 மற்றும் 35 வயதுடைய அந்த இரண்டு சந்தேக நபர்களும் இதற்கு முன் போதைப் பொருள் குற்றப் பின்னணியைக் கொண்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளதாக Mohamad Farouk Eshak கூறினார்.