காஜாங், பிப் 10 – இன்று காலையில், காஜாங்கில் உள்ள போலீஸ் பணியாளர்களின் குடியிருப்பு பகுதியின் 10-வது மாடியில் இருந்து 5 அல்லது 6 வயதுடைய சிறுவன் ஒருவன் விழுந்து மரணமடைந்ததாக, அம்மாவட்ட போலிஸ் தலைவர் மொஹமட் சாயிட் ஹாசான் ( Mohd Zaid Hassan) தெரிவித்தார்.
உயிரிழந்த சிறுவன் போலீஸ்காரரின் மகன் என்பதோடு, சம்பவத்தின் போது அந்த சிறுவன் தனியாக இருந்ததாக அவர் கூறினார்.
இவ்வேளையில், விரும்பத்தகாத இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க, பெரியோர் கண்காணிப்பு இன்றி பிள்ளைகளைத் தனியாக விட வேண்டாமென Mohd Zaid Hassan கேட்டுக் கொண்டார்.