
கோலாலம்பூர். நவ 21 – நாட்டில் ஆபாச உள்ளடக்கத்தின் பரவலை தடுப்பதற்கும், அகற்றுவதற்கும், அதன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கும், மலேசிய காவல்துறையின் கோரிக்கைகளின் அடிப்படையில்தான் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் செயல்படுகிறது.
ஆகையால் பொதுமக்கள் ஆபாசமான உள்ளடக்கத்தைக் கண்டால், அவற்றை காவல்துறையிடம் முதலில் புகாரளிக்கவும். பின்னர் எம்.சி.எம்.சி மேலதிக நடவடிக்கையை எடுக்கும்,” என்று தொடர்பு மற்றும் இலக்கவியல் துணையமைச்சர் தியோ நீ சிங் மக்களவையில் தெரிவித்தார்.
காவல்துறையின் கோரிக்கையின் அடிப்படையில், இவ்வாண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை, மொத்தம் 118 ஆபாச தளங்கள் எம்.சி.எம்.சி வழி தடுக்கப்பட்டதாகவும், சமூக ஊடக தளங்களில் அதன் தரத்தை மீறியதற்காக 76 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கூஆய் நாடளுமன்ற உறுப்பினருமான தியோ கூறினார்.