
சிலாங்கூர், செராசிலுள்ள, பத்து செம்பிலான் போலீஸ் நிலையத்தில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருவர், நீண்ட கால்சட்டையை மாற்றிக் கொண்டதால் பின்னர் அனுமதி வழங்கப்பட்டதை காஜாங் போலீஸ் ஒப்புக் கொண்டது.
அரசாங்க கட்டத்திற்குள் நுழைய கால் முட்டிக்கு கீழ் உடை அணிந்திருக்க வேண்டும்.
எனினும் அந்த விதிமுறையை பின்பற்றாததால் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக, அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் சாயிட் ஹசான் தெரிவித்தார்.
தகுந்த உடை அணிந்திருந்தும் பெண் ஒருவருக்கு போலீஸ் நிலையத்தில் நுழைய தடை விதிக்கப்பட்ட சம்பவம் வைரலானது.
எனினும், சரியான ஆடையை அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதால் அதிருப்தி அடைந்த அப்பெண், பணியில் இருந்த போலீஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றதையும், 20 நிமிடங்களுக்கு பின்னர் நீண்ட கால்சட்டையை அணிந்து கொண்டு அவர் மீண்டும் போலீஸ் நிலையத்திற்கு வந்ததையும் முஹமட் சாயிட் சுட்டிக் காட்டினார்.
சாலை விபத்து ஒன்று தொடர்பில் புகார் செய்ய சம்பந்தப்பட்ட பெண் போலீஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.