
கோலாலம்பூர், மார்ச் 8 – போக்குவரத்தை மறித்துக் கொண்டு நிறுத்தப்பட்டிருந்த Proton Saga காருக்குள் போலீஸ் மேலங்கி இருந்த வேளையில், அதன் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார் .
அந்த கார் , Batu Gajah -வில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிக்கு சொந்தமானது என ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் Yahaya Hassan தெரிவித்தார் . சம்பவத்தின் போது அந்த காரை அவரது உறவினர் ஓட்டியிருந்ததாகவும் அந்த நபர் வாகனமோட்டும் அனுமதியையும் வைத்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.
அதையடுத்து, காரின் உரிமையாளருக்கும் காரை ஓட்டியவருக்கும் 3 சாலை குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாக அவர் கூறினார்.