ஜகார்த்தா,பிப் 8 – கருவுற்றிருக்கும் பெண்களுக்கு பசியார்வம் அதிகமாகவும் அதுவும் வித்தியாசமாகவும் இருக்கும். ஆனால் இந்தோனேசியா, மேற்கு ஜாவா பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு, வாகனத்தில் அதுவும் போலீஸ் மோட்டார் சைக்கிளில் ஏறிச் செல்ல வேண்டுமென ஆசை ஏற்பட்டது.
உடனடியாக அவர், போலீஸ் நிலையமொன்றுக்கு சென்று, போலீஸ் மோட்டார் சைக்கிளில் தன்னை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி கேட்டுள்ளார். ரோந்து பணியில் இருந்த அதிகாரியும் அச்சமயம் போலீஸ் நிலையத்துக்கு திரும்பவே, அப்பெண்ணின் ஆசையும் நிறைவேறியது. அந்த அதிகாரி அந்த கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக் கொண்டு போலீஸ் நிலையத்தைச் சுற்றி வலம் வந்தார்.