Latestமலேசியா

இந்தியாவில் கைதான போதைப் பொருள் கடத்தல் மன்னனின் முதலாளி மலேசியரா?

கோலாலம்பூர், மார்ச் 12 – இந்திய போதைப் பொருள் கடத்தல் மன்னனின் முதலாளி அல்லது அவரது போஸ் தமிழ் திரையுலக பிரமுகர்களுடன் அணுக்கமான தொடர்புள்ள மலேசிய திரைப்பட விநியோகிப்பாளர் என சில இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த சனிக்கிழமை NCB எனும் இந்திய போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியம் 1.13 பில்லியன் ரிங்கிட் மதிக்கத்தக்க போதைப் பொருளுடன் அனைத்துலாக போதைப்பொருள் கடத்தல்காரன் Jaffer Sadiq கைதானத்தை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது. தமிழக ஊடகவியலாளரும் சவுக்கு ஊடகத்தின் உரிமையாளருமான A. சங்கர்
Youtube நேர்க்காணலில் இந்த குற்றச்சாட்டை தெரிவித்திருக்கிறார்.

மலேசிய, நியூசிலாந்து மற்றும் ஆஸ்ரேலியாவில் போதைப் பொருள் கடத்தலில் மலேசியருடன் Jaffer Sadiq கிற்கு தொடர்பு இருப்பதாக NCB ஊடகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. Jaffer Sadiq -கின் Bos மலேசியாவில் இருக்கிறார். இந்திய திரைப்பட பிரமுகர்களுடன் அந்த மலேசியருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக சங்கர் கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகின் பிரமுகர்களுடன் அணுக்கமான தொடர்பை கொண்டிருக்கும் அந்த மலேசியரின் கட்டுப்பாட்டில்தான் Jaffer Sadiq இருந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்டால் தமிழ் திரையுலகைச் சேர்ந்த அதிகமான பிரமுகர்கள் இதில் சம்பந்தப்பட்டதையும் தம்மால் உறுதிப்படுத்த முடியும் என சங்கர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். எனினும் சம்பந்தப்பட்ட அந்த மலேசியரின் பெயரை சங்கர் வெளியிடவில்லை.

கடந்த மூன்று ஆண்டு காலமாக பல்வேறு நாடுகளுக்கு போதைப் பொருளுக்கான 3,500 கிலோகிராம் Pseudoephedrine ரசாயனத்தை 45 முறை அனுப்பிவைத்ததில் அனைத்துலக போதைப் பொருள் கும்பலுடன் Jaffer Sadiq சம்பந்தப்பட்டுள்ளதாக NCB தெரிவித்திருந்தது. இதனிடையே இந்த தகவல் குறித்து உள்நாட்டு வலைத்தள பதிவேடு ஒன்று கருத்தை பெறுவதற்காக உள்துறை அமைச்சுடன் தொடர்பு கொள்ள முயன்றதாகவும் கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!