
கிளந்தான், மாசாங்கில், அரச மலேசிய போலீஸ் படை வாகனத்தை பயன்படுத்தி பட்டாசுகள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், போலீஸ் படை உறுப்பினர் ஒருவர் உட்பட இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை மணி 7.45 வாக்கில், சந்தேகிக்கும் வகையில் பயணித்த, அரச மலேசிய போலீஸ் படைக்கு சொந்தமான Toyota Hilux ரக வாகனம் ஒன்றை பின் தொடர்ந்து சென்று அதனை சோதனையிட்ட அதிகாரிகள், அதிலிருந்த 25 ஆயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள பட்டாசுகளையும், மத்தாப்புகளையும் பறிமுதல் செய்தனர்.
சம்பவத்தின் போது, அந்த நான்கு சக்கர வாகனத்தில் இருந்த, போலீஸ் படை உறுப்பினரும், 35 வயது மதிக்கத்தக்க மெக்கானிக் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைக்கு உதவும் பொருட்டு, அவ்விருவரும் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.