Latestமலேசியா

போலி தடுப்பூசி சான்றிதழ் விவகாரம்; 3 மருத்துவர்கள் உட்பட 25 பேர் கைது

கோலாலம்பூர், பிப் 10 – தடுப்பூசி போட்டுக்கொண்டதாக போலீ சான்றிதழ் தயாரித்தது மற்றும் அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்ததன் தொடர்பில் மூன்று மருத்துவர்கள் உட்பட 25 தனிப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் மூன்று தாதிகள், ஏழு தரகர்கள், கிளினிக் பணியாளர் ஒருவர், பொதுமக்களில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். கூட்டரசு வர்த்தக குற்ற விசாரணைத்துறையின் இயக்குனர் Kamarudin Mohd Din இதனைத் தெரிவித்தார். சிலாங்கூரிலும் , திரெங்கானுவிலும் கடந்த மாதம் இரு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது மருத்துவர் பிப்ரவரி 4 ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதுவரை 9 புகார்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை முழுமையடைந்துள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைக்காக அரசு தரப்பு வழக்கறிஞருக்கு விசாரணை அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என Kamarudin Din தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!