
கோலாலம்பூர், ஜன 29 – வேலை பெர்மிட்டுக்கான தற்காலிக பாஸ் மற்றும் வேலை ஆவணங்களை போலியாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் கும்பல் அல்லது தரப்பினரிடமிருந்து முதலாளிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விலகியிருக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் Saifuddin Nasution கேட்டுக்கொண்டார். கோவிட் தொற்றுக்கு பிறகு தோட்டம், விவசாயம்,கட்டுமானம், தயாரிப்பு மற்றும் சேவைத்துறைகளில் மனித ஆற்றல் அதிகமாக தேவைப்படுவதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இதன் காரணத்தினால்தான் வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிக்கும் நடைமுறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே வேலை பெர்மிட் முறைகேடு நடவடிக்கையில் சம்பந்தப்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.