Latestவிளையாட்டு
ப்ரோ லீக் ஹாக்கி விளையாட்டு; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
ஜோஹனஸ்பெர்க் , பிப் 10 – தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் அனைத்துலக ஹாக்கி சம்மேளனத்தின் புரோ லீக் ஹாக்கிப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 10 – 2 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் இந்தியாவின் இளம் விளையாட்டாளர் Jugraj Singh அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்தார்.
இந்த ஆட்டத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டதை விட இந்திய அணியின் வெற்றி எளிதாக அமைந்தது. இந்தியக் குழு சனிக்கிழமையன்று நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை சந்திக்கிறது.