Latestமலேசியா

மஇகா தொகுதிகளில் மும்முனைப் போட்டி

ஜோகூர் பாரு , பிப் 26 – ஜோகூர் சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் ம.இ.காவின் நான்கு வேட்பாளர்களும் மும்முனைப் போட்டியை சந்திக்கின்றனர்.

ஜோகூர் மஇகா தலைவரும் ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ ஆர்.வித்யானந்தன் Kahang சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பக்காத்தான் ஹராப்பான் சார்பில் Rohani Banu , பெஜூவாங் கட்சியின் Rosdi Amir மற்றும் பெரிக்காத்தான் நேசனலைச் சேர்ந்த Daud ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தெங்காரோ சட்டமன்ற தொகுதியில் ம.இ.காவின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் ரவின்குமார் கிருஷ்ணாமியை எதிர்த்து மூவர் போட்டியிடுகின்றனர். பெஜூவாங் கட்சியின் ‘ Mohd Firadaus , PKR கட்சியின் Zulinah Binti Johari மற்றும் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் Ciku Lan ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

ஜோகூர் மாநில மகளிர் பிரிவின் தலைவியான சரஸ்வதி நல்லதம்பி Kemelah தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து பக்காத்தான் ஹராப்பானின் டாக்டர் சுலைமான் முகமட் நோர், பெஜூவாங் சார்பில் Norizan Sahardin , பெரிக்காத்தான் நேசனல் சார்பில் Cikgu Mala ஆகியோர் போட்டியிடுகின்றனர். இம்முறை ம.இகா போட்டியிடுவதற்கு வழங்கப்பட்ட இரண்டு புதிய தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும்.

மற்றொரு புதிய தொகுதியான புக்கிட் பத்துவில் போட்டியிடும் S .சுப்பையாவை எதிர்த்து வாரிசானின் Lee ming wen, PKR ரின்  Chiong Sern , பெரிக்காத்தான் நேசனலின் Tan Heng Choon ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!