Latestமலேசியா

மஇகா 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியா ?

கோலாலம்பூர், செப் 23 – 15-வது பொதுத் தேர்தலில் 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுவதை , மஇகா மறுத்திருக்கின்றது.

நாங்கள் எத்தனை தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் என கூறவிரும்பவில்லை; மாறாக வெற்றி பெறக் கூடிய தொகுதிகளில் ஏற்புடைய எண்ணிக்கையில் நாங்கள் போட்டியிடுவதே சரியாக இருக்குமென, அக்கட்சியின் தலைவர் டான் ஶ்ரீ எஸ்.ஏ . விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

15 -வது பொதுத் தேர்தலில், கட்சியின் பாரம்பரிய தொகுதியான கேமரன் மலை உட்பட மொத்தம் 12 நாடாளுமன்றத் தொகுதிகளில் , மஇகா போட்டியிடவிரும்புவதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்த செய்தியைத் தொடர்ந்து அவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்வேளையில் கேமரன் மலையில் மஇகா போட்டியிடுமா என வினவப்பட்டபோது, இறுதி முடிவு தேசிய முன்னணியின் தலைவர் Ahmad Zahid Hamidi- யின் கையில் தான் உள்ளது என விக்னேஸ்வரன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!