Latestமலேசியா

மகனுக்கு வேண்டுமென்றே இரண்டாவது முறையாக பிறப்புப் பத்திரத்திற்கு விண்ணப்பித்த தந்தைக்கு 8,000 ரிங்கிட் அபராதம்

ஜெராண்டுட், ஏப்ரல்-30- பஹாங்கில், தனக்குப் பிறந்த முதல் வாரிசை வேண்டுமென்றே ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை பதிவுச் செய்த தந்தைக்கு, 8 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

38 வயது Abdul Aziz Saini குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, ஜெராண்டூட் மேஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி அத்தீர்ப்பை வழங்கினார்.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 10 மாதச் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வர்த்தகரான அந்நபர், 16 வயது மகனுக்குத் தாமதமாகப் பிறப்புப் பத்திரம் எடுப்பதற்காக கடந்தாண்டு செப்டம்பரில் தேசியப் பதிவுத் துறை JPN அலுவலகமொன்றுக்குச் சென்றுள்ளார்.

ஆனால், JPN அதிகாரிகள் ஆவணங்களைப் பரிசோதித்ததில், குடிமகன் அல்லாத பிரிவின் கீழ் 2008-ஆம் ஆண்டே அவரின் 

மகனுக்குப் பிறப்புப் பத்திரம் எடுக்கப்பட்டு விட்டதைக் கண்டுபிடித்தனர்.

கம்போடிய நாட்டு பெண்ணை முறையாகத் திருமணம் செய்துக் கொண்டதற்கான சான்றிதழைச் அவர் சமர்ப்பிக்கத் தவறியதாலேயே, மகனின் பிறப்புப் பத்திரம் அந்தப் பிரிவின் கீழ் வைக்கப்பட்டிருந்தது.

பிறகு JPN அதிகாரிகள் துருவி விசாரித்ததில், ஏற்கனவே பிறப்புப் பத்திரம் எடுத்து விட்டதை அவர் ஒப்புக் கொண்டு, அந்த பிறப்புப் பத்திரத்தை JPN அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!